விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட புதிய போஸ்டர்,vishal sj suryah in mark antony movie shooting update with new poster | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். விரைவில் லண்டனில் தொடங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்கி நடிக்கவுள்ளார். இதனிடையே விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. 

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக்க படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மிரட்டலான புதிய போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளனர். பக்கா மாஸான மார்க் ஆண்டனி பட புது போஸ்டர் இதோ… 
 

#MarkAntony Marking towards finishing! 😎🔥👍🏼

A @gvprakash Musical! 🎼@VishalKOfficial @vinod_offl @Adhikravi @riturv @iam_SJSuryah #SunilVerma @mee_sunil @mgabhinaya @editorvijay #DSG pic.twitter.com/ptbvdkfqT5

— Mini Studios LLP (@ministudiosllp) January 26, 2023

சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி... ARரஹ்மானின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி... ARரஹ்மானின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன்… வதந்திகளுக்கு திருக்குறளில் பதிலடி கொடுத்த படக்குழு! விவரம் இதோ
சினிமா

சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன்… வதந்திகளுக்கு திருக்குறளில் பதிலடி கொடுத்த படக்குழு! விவரம் இதோ

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே
சினிமா

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே