வருகிறான் கேப்டன் மில்லர் - துப்பாக்கியுடன் தனுஷ்.. Special glimpse இதோ.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சிறப்பு வீடியோ - Special Glimpse from Dhanush Captain miller set | Galatta

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். 'ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் 1930 சுதந்திர காலத்தில் நடக்கும் கதைக்களத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மூன்று தோற்றங்களில் நடிக்கும் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் திலீப் சுப்ராயன் சண்டை வடிவமைப்பு செய்ய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார் பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்கி.

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு இந்த படத்திற்கான முதல் கட்ட படபிடிப்பை டிசம்பர் மாதத்தில் முடித்தது படக்குழு. புத்தாண்டு, பொங்கல் விடுமுறையையடுத்து மீண்டும் துவங்கியுள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம். மிகப்பெரிய கிராமம், கோயில்கள் போன்று பிரம்மாண்டமாக படத்திற்காக கலை இயக்குனர்  டி.ராமலிங்கம் வடிவமைப்பில் உருவாக்கப்படும் செட்டுகளுத்கு நடுவே கெத்தாக துப்பாக்கியை பிடித்தவாறு தனுஷ் மாஸ் லுக்கில் நின்று கொண்டிருக்கும் வீடியோ தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Captain Miller 😎 A glimpse https://t.co/QuDJOUthyQ

— Dhanush (@dhanushkraja) January 22, 2023

அருண் மாதேஸ்வரனுடைய முந்தைய படங்களான ராக்கி, சாணி காகிதம் படங்கள் ரத்தம் தெறிக்க தெறிக்க பக்கவான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும், சிறப்பான திரைக்கதையுடன் நேர்த்தியான தொழில் நுட்பத்தில் படத்தின் தரத்தை ராவாக கொடுத்து அசத்திருப்பார் அருண் மாதேஸ்வரன். படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் படத்திற்கென்று தனி ரசிகர் கூட்டமே இன்றும் இருந்து வருகிறது. நடிப்பில் தனுஷ் என்பது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் பேசப்பட்ட ஒருவர் அவருடைய படங்களின் எதிர்பார்ப்பு இன்று மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளது இந்த நிலையில் இந்த இருவரது கூட்டணி அறிவிப்பிலிருந்தே கேப்டன் மில்லர் படத்திற்கான அறிவிப்பு அதிகமாக எழுந்தது, தற்போது பிரம்மாண்டமான செட்டுகளின் மத்தியில் தனுஷ் நிற்கும் தோரணை படத்தின் எதிர்பார்ப்பை வேறு தளத்திற்கு கொண்டு போய் விடுகிறது, மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தனுஷ் இயக்கம் இரண்டாவது படமாகும், இதில் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி' திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..
சினிமா

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..
சினிமா

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..
சினிமா

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..