அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜின் LCU குறித்து மனம் திறந்த RJபாலாஜி,rj balaji shared about lokesh kanagaraj and lcu in run baby run special interview | Galatta

தனக்கென தனி பாணியில் ரசிகர்கள் விரும்பும் அசத்தலான படங்களை கொடுத்து வரும் RJ.பாலாஜி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ரன் பேபி ரன். பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் RJபாலாஜி உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் & விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவில், மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்ய, சாம்.CS இசையமைத்துள்ளார். நடிகர் RJபாலாஜியின் திரைபயணத்தில் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக வெளிவரும் ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை RJ.பாலாஜி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனான நட்பு குறித்து RJ.பாலாஜியிடம் கேட்டபோது, ஆரம்ப கட்டத்தில் லோகேஷ் கனகராஜை சந்தித்ததில் இருந்து அவர்களுக்கிடையிலான நட்பு தற்போது எந்த அளவிற்கு இருக்கிறது என்பது வரை பகிர்ந்து கொண்டார்.அந்த வகையில் பேசும் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களுக்கான திட்டங்கள் மற்றும் LCU குறித்தும் மிகவும் சுவாரசியமான தகவல்களை தெரிவித்தார்.
 
அப்படி பேசும்போது, “நானும் அவரும் பேசிக்கொண்ட போது நான் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் செய்கிறேன்? அவர் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் செய்கிறார் என பகிர்ந்து கொண்டோம். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன், அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜ் (தனது படங்களை) வரிசைப்படுத்தி இருக்கிறார். அவரிடம் அவ்வளவு ஐடியாக்கள் இருக்கின்றன. அந்த LCU இன்னும் பெரியதாகவும் பிரம்மிப்பானதாகவும் சிறந்ததாகவும் தான் ஆகப்போகிறது என நினைக்கிறேன். அது இந்தியாவில் ஒரு மார்வெல்ஸ் மாதிரியான ஒன்றாக ஆகப்போகிறது. அதற்கு வெறும் ஐடியா மட்டும் இருந்தால் போதாது, அதற்காக வேலை செய்ய வேண்டுமல்லவா..? அந்த வேலையும் செய்வார்.” என தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பாலாஜியின் அந்த பேட்டி இதோ…
 

‘கிருட்டு.. கிருட்டு.. இது புது vibe அ இருக்கே..  -  வெளியானது கவினின் 'டாடா' பட பாடல்.. புரோமோ வீடியோ இதோ!
சினிமா

‘கிருட்டு.. கிருட்டு.. இது புது vibe அ இருக்கே.. - வெளியானது கவினின் 'டாடா' பட பாடல்.. புரோமோ வீடியோ இதோ!

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..
சினிமா

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..
சினிமா

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..