தனது முதல் படமான கோமாளி படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்கி நடித்து சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இயக்குனர் பிரபு ரங்கநாதன் அவர்களை நேரில் அமைத்து பொன்னாடை போர்த்தி வெகுவாக பாராட்டியுள்ளார்.

முன்னதாக கோமாளி திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் அவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தளபதி விஜய்க்கு தனது கதை ஒன்றையும் சொல்லியுள்ளார். இது குறித்து சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் பரவி வந்த நிலையில், தளபதி விஜய் அவர்களுக்கு சொன்ன கதை சயின்ஸ் ஃபிக்சன் கதை என தற்போது செய்திகள் பரவி வருகின்றன.

நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற லவ் டுடே கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தளபதி விஜய் அவர்களுடனான சந்திப்பு மற்றும் அவருக்கு சொன்ன கதை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், 

“என்ன ஜானர் என்பது வரை எப்படி தெரிந்தது... சரி கதை சொல்லி இருக்கிறேன். மீதி எல்லாமே என்னால் இப்போது தெரிவிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். இதெல்லாம் அவர்களது தரப்பிலிருந்து தான் வர வேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும். கோமாளி முடிந்த சமயத்தில் தான் அவரை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கோமாளி மிகவும் பிடித்திருந்தது”

என தெரிவித்துள்ளார். மேலும் தளபதி விஜய் அவர்கள் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட பிரதீப் ரங்கநாதனின் முழு வீடியோ இதோ…