பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் விளங்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் - அஜித்குமார் - போனி கபூர் மற்றும் நீரவ்ஷா கூட்டணியில் மூன்றாவது படமாக துணிவு திரைப்படம் தயாராகியுள்ளது.

மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ராஜதந்திரம் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இதனை மஞ்சு வாரியர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

No Guts, No Glory! ❤️#THUNIVU #dubbing #ajithkumar #ak #hvinoth pic.twitter.com/9j3qU6Kdyo

— Manju Warrier (@ManjuWarrier4) October 30, 2022

No Guts, No Glory! ❤️#THUNIVU #dubbing #ajithkumar #ak #hvinoth pic.twitter.com/RrB1xyohfh

— Manju Warrier (@ManjuWarrier4) October 30, 2022