பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்த்த பிரபு தேவா.. Nostalgic டைட்டிலுடன் வெளியான முதல் பார்வை இதோ..

பிரபு தேவா நடிக்கும் புது படத்தின் டைட்டில் வெளியானது விவரம் உள்ளே - Prabhu deva next movie title out now | Galatta

90 களின் ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு தேவா. ஆரம்பத்தில் நடன இயக்குனராக தன் திரைப்பயணத்தை தொடங்கி பின்  நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முக திறனுடன் வலம் வந்தவர் பிரபு தேவா. நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த பிரபு தேவா. தேவி, குலேபகாவலி, சார்லி சாப்ளின் 2, லக்ஷ்மி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் மை டியர் பூதம், தேள், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த ஆண்டு பகீரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் பிளாஷ் பேக் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படம் வெளியீட்டிருக்கு தயாராக உள்ளது. மேலும் தொடர்ந்து பிரபு தேவா பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் பிரபல இயக்குனரான பிரபு தேவா மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரபு தேவா நடிக்கவிருக்கும் புதிய படம் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள திரைப்படங்களான டிஜிபௌட்டி, தெரு ஆகிய படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் எஸ் ஜே சினு இயக்கும் இப்படத்திற்கு ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபு தேவாவின் அறிமுக திரைப்படமான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பேட்ட ராப் என்ற பாடலின் தலைப்பை இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடிக்கவிருக்கிறார். படத்தில் பிரபு தேவா ஹீரோவாக விரும்பும் இளைஞனாக நடிக்கின்றார். வேதிகா மியூசிக் பேண்ட் நடத்துபவராக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தில் பகவதி பெருமாள் –பக்ஸ், விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பேட்ட ராப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு  டி இமான் இசையமைகின்றார். வரும் ஜூன் 19 ம் தேதி முதல் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

viduthalai actor soori went auto to meet his fan mother video goes viral

படத்தின் டைட்டில் போஸ்டரை டி இமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன், நினைவில் நீங்க நினைவுகளை கொடுத்த நம் மனம் கவர்ந்த இந்தியன் மைக்கேல் ஜாக்சன் திரும்ப கொண்டு வரும் பேட்ட ராப் திரைப்படத்தின் முதல் பார்வை என்று குறிப்பிட்டு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் டி இமான். இதையடுத்து டி இமான் அவர்களின் பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Here is the #PettaRap announcement bringing the nostalgia memories of Indian Michael Jackson @PDdancing.
A @sinu_sj ride!!#PaatuAdiAattamRepeat 🥳@pettarapthemovi @Vedhika4u @Sanlokesh @onlyartmohan @Viveka_Lyrics @madhankarky @onlynikil @akash_tweetz
A #DImmanMusical
Praise… pic.twitter.com/lP0sNjprcn

— D.IMMAN (@immancomposer) June 1, 2023

பேருந்து விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு.. அதிர்ச்சியில் திரையுலகம்.. – முழு விவரம் உள்ளே..
சினிமா

பேருந்து விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு.. அதிர்ச்சியில் திரையுலகம்.. – முழு விவரம் உள்ளே..

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..
சினிமா

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...
சினிமா

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...