விறுவிறுப்பான கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2... ஷூட்டிங் குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

கமல்ஹாசன் ஷங்கரின் இந்தியன் 2 பட ஷூட்டிங் அப்டேட்,make up artist margaux lancaster shared shooting update of indian 2 kamal haasan | Galatta

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 2 பட, படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியானது. கடைசியாக தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றன. அதில் குறிப்பாக நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் KH234 படமும் மலையாளத்தில் ஃபகத் பாஸில் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் திரைப்படத்திற்கு திரைக்கதை , வசனங்களை கமல்ஹாசன் அவர்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. முன்னதாக கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. பின்னர் தடைகள் நீங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கும் அதே வேளையில் இடையிடையே தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய ஆக்ஷன் பகுதியின் படப்பிடிப்பை ஷங்கர் தொடங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தியன் 2 திரைப்படத்தில் மேக்கப் கலைஞராக பணியாற்றும் பிரபலமான ஹாலிவுட் மேக்கப் கலைஞர் MARGAUX LANCASTER, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மேக்கப் உபகரணங்களை பேக் செய்து வைத்த புகைப்படத்தை பகிர்ந்து, “இந்தியன் 2 படத்தில் இந்தப் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்தது. என்ன ஒரு சாகசம் இன்னும் இரண்டு வாரத்தில் மீண்டும் சென்னையில் சந்திக்கிறேன்!” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். எனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் சென்னையில் தொடங்கும் என தெரிகிறது. இன்னும் இதர தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்கப் கலைஞர் MARGAUX LANCASTER பகிர்ந்த அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Margaux Lancaster (@margauxlynlancaster)

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ
சினிமா

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!
சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!