முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!

ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீரா காதல் பட உசுராங்கூட்டில் வீடியோ பாடல்,Jai aishwarya rajesh in theera kaadhal movie usuraankootil video song | Galatta

ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் - ஷிவடா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க முக்கோண காதல் கதையாக வெளிவந்த தீராக் காதல் திரைப்படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த காஃபி வித் காதல் படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உனக்காக ஜெயின் நடிப்பில் தயாராகி இருக்கும் பிரேக்கிங் நியூஸ் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், தொடரந்து அறம் படத்தின் இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் ஒரு படம் இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகும் ஒரு படம் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் என அடுத்தடுத்த முக்கிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதேபோல் தென்னிந்திய சினிமாவில் இன்றியமையாத கதாநாயகிகளில் ஒருவராக தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா என வரிசையாக அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்த துருவ நட்சத்திரம், விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடித்த தீயவர் குலைகள் நடுங்க என மூன்று தமிழ் படங்களும், டொமினோ தாமஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் அஜயண்டே ரண்டாம் மோஷனம், ஜோ ஜோ ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்கும் புலிமடா மற்றும் பார்வதி, ஊர்வசி, ஜெய் பீம் லிஜோ மோல் ஜோஸ், ரம்யா நம்பீசன் ஆகியோரோடு இணைந்து நடித்துவரும் ஹெர் என மூன்று மலையாள படங்களும் வரிசையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து மற்றும் ஷிவடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் தீராக் காதல். அதே கண்கள் மற்றும் பெட்ரோமேக்ஸ் படங்களின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள தீராக் காதல் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள தீராக் காதல் படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி தீராக் காதல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் தீராக் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தீரா காதல் திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக உசுராங்கூட்டில் எனும் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. சித்து குமாரின் இசையில் சத்திய பிரகாஷ் பாடியிருக்கும் உசராங்கூட்டில் பாடலை மோகன் ராஜன் எழுதியிருக்கிறார். சற்று முன்பு வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல் படத்தின் உசுராங்கூட்டில் வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே
சினிமா

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ
சினிமா

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ