தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சஞ்சீவ்..? – நடிகை பிரித்தி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. Exclusive interview இதோ..

லியோ படத்தில் நடிகர் சஞ்சீவ் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை பிரீத்தி - Actor sanjeev joins thalapathy vijay leo movie here is the upate | Galatta

இந்தியா சினிமாவில் தமிழ் திரையுலகில் இருந்து அடுத்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்ககூடிய திரைப்படமாக உருவாகி வருவது தளபதி விஜய் நடித்து வரும் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் தளபதி விஜய் க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ்  படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனல் சிறப்பு பேட்டியில் பிரபல சின்னத்திரை நடிகை பிரீத்தி அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தன் கணவரும் நடிகரும் தளபதி விஜயின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் குறித்து பேசுகையில்.

“சஞ்சீவ் க்கு மிக முக்கியமான படத்திற்கு முக்கியமான இயக்குனர் முக்கியமான கதாபாத்திரத்திற்கு சஞ்சீவ் நடிக்க அழைத்தார்கள்.. ஆனால் வேறு ஒரு முக்கியமான நபருக்கு அந்த வாய்ப்பு போனது. பின் மீண்டும் சஞ்சீவ் அதை வற்புறுத்தி பெறவேண்டும் என்று நினைக்கல..” என்றார் நடிகை பிரீத்தி.  தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் விஜயின் ஆரம்ப கால திரைப்படங்கள் முதல் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வரை பல படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடதக்கது.

மேலும் தொடர்ந்து நேர்காணலில், “விஜய் – சஞ்சீவ் அவங்களோட நட்பு எதையும் எதிர்பார்த்து வர நட்பு இல்லை.. தொழில் சார்ந்து ஓரே துறையில் வேலை செய்தாலும் சஞ்சீவ் காக எதையும் விஜய் சார சார்ந்து ஒரு விஷயம் பண்ணனும் நினைச்சது இல்லை.. விஜய் டிவியில் நண்பன் பட நேர்காணல் இருந்தது. அப்போ விஜய் சாரோட நட்பு வட்டாரம் வந்திருந்தாங்க..  ஆனா சஞ்சீவ் போகல.. காரணம் திருமதி செல்வம் சீரியல் நடிச்சிட்டு இருந்தாரு..  அதனால் விஜய் சஞ்சீவ் கிட்ட 5,6 மாதம் பேசவே இல்ல.. அப்படி என்ன வேலை னு கோச்சிக்கிட்டார்..   சஞ்சீவ் கும் அந்த வருத்தம் இருந்தது. நண்பன் ன்ற விஷயத்துல நம்ம போவ முடியலனு வருத்தப்பட்டார். அப்பறம் திடீருனு ரெண்டு பேர் பேசிட்டு ஒண்ணா சேர்ந்துட்டாங்க..” என்றார் நடிகை ப்ரீத்தி.

மேலும் நடிகை பிரீத்தி பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் உள்ளடங்கிய முழு வீடியோ இதோ..

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...
சினிமா

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...

“சினிமாவை விட்டு விலகலாம்னு நினைச்சேன்..” மனம் திறந்த நடிகை வசுந்தரா.. – சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“சினிமாவை விட்டு விலகலாம்னு நினைச்சேன்..” மனம் திறந்த நடிகை வசுந்தரா.. – சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு நேர்காணல் உள்ளே..

அந்த மனசு தான் கடவுள்.. இலவச புற்றுநோய் சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டுகள்.. – விவரம் உள்ளே..
சினிமா

அந்த மனசு தான் கடவுள்.. இலவச புற்றுநோய் சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டுகள்.. – விவரம் உள்ளே..