ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..

வெளியானது மகேஷ் பாபுவின் SSMB28 படத்தின் டைட்டில் வைரல் வீடியோ உள்ளே - Mahesh babu mass glimpse from Trivikram SSMB28 | Galatta

தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு.தெலுங்கு திரையுலகில் மிகபெரிய ஸ்டாராக வலம் வருகிறார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஆரம்பத்தில் இருந்தே கவர்ந்தவர் இவர். பக்கா கமர்ஷியல் மாஸ் திரைப்படம் என்றாலே அது மகேஷ் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கொடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ‘சர்காரு வாரி பட்டா’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றியுடன் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் குவித்தது.அதை தொடர்ந்து தற்போது பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திலும் மகேஷ் பாபு கதாநயாகனாக கைகோர்த்துவுள்ளார்.. இதனிடையே மகேஷ் பாபு வின் 28 வது திரைப்படமாக உருவாகியிருக்கும் SSMB28 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற ‘அல வைகுண்டபுரமலோ’ படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இப்படத்திற்கு ‘குண்டூர் காரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பூஜா ஹெக்டே கதாநாயாகியாக நடிக்க ஸ்ரீ லீலா, ஜெகபதிபாபு, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல தமிழ் திரைப்படங்களான விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன்.S இசையமைத்து வருகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்பின் மத்தியில் உருவாகி வந்த இப்படத்தின் குண்டூர் காரம் என்ற தலைப்பை அட்டகாசமான சிறப்பு வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. எஸ் தமனின் மிரட்டலான இசையில் இதுவரை இல்லாத ஸ்டைலில் மாஸ் காட்டி அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் மகேஷ் பாபு என்ட்ரியுடன் வெளியான குன்டூர் காரம் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும் டைட்டிலுடன் highly inflammable என்ற வாசகத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே தலைப்பு அறிவிப்பிலிருந்தே மகேஷ் பாபு ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ம் தேதி சங்கராந்தி வெளியீடாக உலகளவில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த மனசு தான் கடவுள்.. இலவச புற்றுநோய் சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டுகள்.. – விவரம் உள்ளே..
சினிமா

அந்த மனசு தான் கடவுள்.. இலவச புற்றுநோய் சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டுகள்.. – விவரம் உள்ளே..

“ஹீரோவிற்கு நிகராக சம்பளம் வாங்குவது நான் மட்டும் தான்..” பெருமையுடன் கங்கனா ரனாவத் பதிவு – ரசிகர்களால் வைராலாகும் பதிவு இதோ..
சினிமா

“ஹீரோவிற்கு நிகராக சம்பளம் வாங்குவது நான் மட்டும் தான்..” பெருமையுடன் கங்கனா ரனாவத் பதிவு – ரசிகர்களால் வைராலாகும் பதிவு இதோ..

அடிபட்ருக்கேன்.. நிறைய அடி விழுந்துச்சு..  'டக்கர்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தார்த்.. – முழு விவரம் உள்ளே..
சினிமா

அடிபட்ருக்கேன்.. நிறைய அடி விழுந்துச்சு.. 'டக்கர்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தார்த்.. – முழு விவரம் உள்ளே..