மதுரையில் ஆட்டோவில் பயணம்.. ரசிகரின் தாயை காண சென்ற நடிகர் சூரி...– வைரலாகும் வீடியோ இதோ..

ரசிகரின் தாய் உடல்நலத்தை விசாரித்த நடிகர் சூரி வீடியோ உள்ளே - Soori meet his fan mother viral video here | Galatta

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த்து பின் காமெடியான அறிமுகமாகி தனித்துவமான உடல்மொழி வட்டார பேச்சு வழக்கு என்று தனக்கே உரித்தான பணியில் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக அதிரடியாக களம் இறங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் கடின உடல் உழைப்பு எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று காமெடியன் சூரி தற்போது கதையின் நாயகனாக பரிணமித்துள்ளார்.

அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான விடுதலை திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பையடுத்து  வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சூரி விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திலும் சூரி நடித்து வருகிறார். இப்படத்தை சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி வருகிறார்.  இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து சூரி நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குனர் அமீர் இயக்கும் இறைவன் மிக பெரியவன் என்ற படத்திலும் சூரி நடிக்கவிருக்கிறார். தற்போது சூரி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதா கதாநாயகனாக வளர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மதுரை தத்தனேரி அருகே பாக்கியநாதபுரம் பகுதியில் உள்ள மகாதீரன் என்ற சூரியின் ரசிகரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் உள்ள செய்தியை அறிந்த சூரி உடனே ஆட்டோவில் சென்று அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவரை சந்தித்து பேசிய சூரி, “என் பேரை சொல்லி நிறைய பல உதவிகள் செய்து வருகின்றனர். என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்து இருக்கிறேன். இதுதான் எனக்கு பெருமை” என்றார். பின் தன் ரசிகர்கள் மற்றும் அவர் குடும்பத்தாருடன் பேசிவிட்டுப் அங்கிருந்து ஆட்டோவிலே சென்றார்.  நடிகர் சூரியின் எளிமையாக தன் ரசிகருக்கு கொடுத்த முக்கியத்துவமான  இந்த செயல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..
சினிமா

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...
சினிமா

ஒடிடி தளங்களுக்கு புது விதிமுறை..மீறினால் கடும் நடவடிக்கை.. - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் – விவரம் உள்ளே...

“சினிமாவை விட்டு விலகலாம்னு நினைச்சேன்..” மனம் திறந்த நடிகை வசுந்தரா.. – சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“சினிமாவை விட்டு விலகலாம்னு நினைச்சேன்..” மனம் திறந்த நடிகை வசுந்தரா.. – சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு நேர்காணல் உள்ளே..