தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நேர்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற 2023 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க, ராஜதந்திரம் வீரா & சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

2023 பொங்கல் வெளியீடாக ரிலீஸாக இருக்கும் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயணட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. துணிவு பட ரிலீஸ் அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதே பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டு அஜித் குமாரின் வீரம் மற்றும் தளபதி விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக ரிலீசான நிலையில் தற்போது மீண்டும் அஜித் குமார் - விஜயின்  துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இரண்டு திரைப்படங்களும் ஒன்றாக வெளியாகும் இந்த பொங்கலில் தமிழ் சினிமா, பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு திரைப்படங்களும் பொங்கல் வெளியீடு என்றாலும் ரிலீஸ் ஆகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

𝐇𝐞𝐫𝐞’𝐬 𝐭𝐡𝐞 𝐁𝐈𝐆 𝐍𝐄𝐖𝐒!🎉🥁

WE’RE BEYOND EXCITED TO ANNOUNCE OUR ASSOCIATION WITH #AJITHKUMAR’s #THUNIVU

Get ready for #ThunivuPongal!⚡️#NoGutsNoGlory#HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @mynameisraahul #romeopictures @kalaignartv_off pic.twitter.com/zpi22xsNby

— Red Giant Movies (@RedGiantMovies_) October 28, 2022