தமிழ் திரை உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து பொறியாளன் , வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுடைய பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு என ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்த வரிசையில் அடுத்தடுத்து நூறு கோடி வானவில், ஸ்டார் மற்றும் டீசல் ஆகிய திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே நடிகர் ஹரிஷ் கல்யாண் சில வாரங்களுக்கு முன்பு தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கையை ஒன்றை வெளியிட்டு தனது வாழ்க்கை துணையான நர்மதா உதயகுமாரை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயக்குமாரின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் இருவருக்கும் கலாட்டா குழுமம் மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

Adorable pictures from @iamharishkalyan & #NarmadaUdayakumar's wedding today. Here's wishing the cute couple a happy married life. ❤️💐#HarishKalyanWedding #harishkalyan pic.twitter.com/DAqfNl7AWX

— Galatta Media (@galattadotcom) October 28, 2022