தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் தற்சமயம் கே ஜி எஃப் திரைப்படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ப்ராஜக்ட் கே திரைப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிப்ருஷ். ராமராக பிரபாஸ் & சீதையாக கீர்த்தி சனோன் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கிறார். ஹனுமானாக தேவ்தத்தா நாகே நடிக்கிறார். 

T-Series Films & Retrophiles தயாரிப்பில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் சாச்செட்-பரம்பரா இசையமைத்துள்ள ஆதிப்ருஷ் படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ஆதிப்ருஷ் திரைப்படத்தின் டீசரில் இடம்ப்பெற்ற VFX காட்சிகள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் ஆதிப்ருஷ் திரைப்படத்தின் VFX பணிகளை இன்னும் சிறப்பாக செய்து ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே திரைப்படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு ஜூன் 16க்கு மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

जय श्री राम…#Adipurush releases IN THEATRES on June 16, 2023.#Prabhas #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 #ShivChanana @manojmuntashir @TSeries @RETROPHILES1 @UV_Creations @Offladipurush pic.twitter.com/kXNnjlEsib

— Om Raut (@omraut) November 7, 2022