கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் 1997-ம் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் டைட்டிலில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த லவ் டுடே திரைப்படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய்க்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளனர். முன்னதாக, தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதை சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வரும் லவ் டுடே திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜயிடம் கதை சொல்லி இருப்பது குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் தளபதி கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், "ஆமாம் கதை சொல்லி இருக்கிறேன்.. ஆனால் அதைப் பற்றி இந்த நேரத்தில் பேசினால் அதை வைத்து நான் இந்த படத்திற்கான விளம்பரத்தை தேடுவதாக ஆகிவிடும். இதுகுறித்து பின்னர் பேசலாம்" என தெரிவித்துள்ளார்.

தற்சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ரிலீசாக உள்ளது. அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் #தளபதி67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த வரிசையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் தளபதி விஜய் கைகோர்ப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.