தனக்கே உரித்தான பாணியில் படத்திற்கு படம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தரமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்திய திரை உலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸாக தயாராகி வருகிறது.

முன்னதாக சீயான் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவநட்சத்திரம் படம் அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் தெரிவித்ததால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டா குஸ்தி, ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே மலையாளத்தில் வெளிவந்து இந்திய சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்த சூப்பர் ஹிட் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை RDC மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய, ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது அந்த ட்ரைலர் இதோ…