உலக அளவில் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழும் மகேந்திர சிங் தோனி அவர்கள் தற்போது திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் நல்ல என்டர்ட்டெய்னிங் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் தயாரிப்பாளராக தனது முதல் திரைப்படத்தை  தமிழில் மகேந்திர சிங் தோனி தயாரிக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.  முப்பரிமாண வடிவிலான கிராபிக் நாவலாக வெளியான அதர்வா - தி ஆர்ஜின் எனும் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

தோனியின் மனைவியான சாக்ஷி தோனி எழுதிய கதைக்கருவை மையமாக கொண்டு ரமேஷ் தமிழ்மணி திரைக்கதை அமைத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடக கதைகள், நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் என பல வெரைட்டியான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களையும் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அடுத்தடுத்து தயாரிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…