மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், வெகுவிரைவில் இத்திரைப்படம் ரிலீஸாகும் என சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான், கத்ரீனா கைஃப் உடன் மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக மும்பைக்கர் மற்றும் மௌன திரைப்படமான காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மேலும் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் FARZI எனும் வெப்சீரிஸுலும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகியுள்ள மோகன்தாஸ் மற்றும் கட்டா  குஸ்தி ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளன.

இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணுவிஷால் இணைந்து நடித்திருக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகுல் தருமன் ஒளிப்பதிவில் Mu.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்த, இடம் பொருள் ஏவல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடம் பொருள் ஏவல் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இடம் பொருள் ஏவல் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.