தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். மிர்ச்சி சிவா & ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வணக்கம் சென்னை திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். 

தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த காளி திரைப்படத்தை  இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள திரைப்படம் பேப்பர் ராக்கெட். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் திரைப்படம் விரைவில் ஜி5 ஒரிஜினல் OTT தளத்தில் நேரடியாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா மற்றும் கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கருணாகரன் நிர்மல் பழனி டி ராஜ் சின்னி ஜெயந்த் காளி வெங்கட் பூர்ணிமா பாக்யராஜ் GM.குமார் அபிஷேக் பிரியதர்ஷினி ஆகியோர் பேப்பர் ராக்கெட் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள பேப்பர் ராக்கெட் படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பேப்பர் ராக்கெட் திரைப்படத்திலிருந்து சேரநாடு பாடலின் மியூசிக் வீடியோ தற்போது வெளியானது. நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ள சேரநாடு பாடல் இதோ…