தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். முன்னதாக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே, இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படத்திலும்,  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக உதயநிதி நடிப்பில் தயாராகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்  இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார் . மேலும் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். படக்குழுவினரை முதல்வர் பாராட்டிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…