சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் நேற்று மே 15ஆம் தேதி வெளியானது.
 
நேற்று (மே 15) சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் சிலம்பரசன்.TR ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்வில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்  கமல்ஹாசனின் விருமாண்டி திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றும், விரைவில் உலக நாயகனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கமலஹாசனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன்.T.R உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களைப் பற்றி பேசும்பொழுது, "திரைக்குப்பின்னால் தனது தந்தை குரு என்றால் திரையுலகில் எனக்கு குரு கமல்ஹாசன் அவர்கள் தான்" என தெரிவித்துள்ளார்.