தெலுங்கானாவில் காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்ச ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் பாத்ததோட்டா  பகுதியை சேர்ந்தவர் லட்சுமி.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் திருமணம் முடிந்து மாலையில் லட்சுமி வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டுள்ளார் . நீண்ட நேரம் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, லட்சுமி சுய நினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.  

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் லட்சுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் லட்சுமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் மணமகனுடன்  நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லட்சுமி திருமணம் முடிந்த கையோடு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.