இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் அடுத்ததாக பிரபல இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்

மேலும் நடிகர் முதல்முறையாக ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்துள்ள திரைப்படம் சீதா ராமம்.

சீதா ராமம் திரைப்படத்தில் துல்கருடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்திற்கு P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில், சீதா ராமம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மேஜர் செல்வன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் புதிய போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ… 
 

Attention Everyone!
𝐌𝐚𝐣𝐨𝐫 𝐒𝐞𝐥𝐯𝐚𝐧 is here!

Here's the first look of @menongautham from #SitaRamam.

▶️ https://t.co/PiWisRU991@dulQuer @mrunal0801 @hanurpudi @iamRashmika @iSumanth @Composer_Vishal @VyjayanthiFilms @SwapnaCinema @SonyMusicSouth#SitaRamamOnAug5 pic.twitter.com/7qyuaBIJyU

— Nikil Murukan (@onlynikil) July 15, 2022