சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார்.

சித்துவிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த வருட இறுதிக்குள் திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது,எப்போதும் ரசிகர்களுடன் பேசிக்கொண்டு செம ஜாலியாக தைரியமாக இருக்கும் சித்ரா குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

பூந்தமல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.விரைவில் திருமணமாகவிருந்த நிலையில் இவர் எடுத்துள்ள இந்த விபரீத முடிவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது மரணம் குறித்த காரணம் என்ன என்பது தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.