இந்திய அணி  ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 3 டி20 தொடர் மற்றும் 4 போட்டிகள் கொணட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்தியா விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டியில் தோற்றாலும் கூட தொடரை வென்றது இந்தியாதான்.


சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனிட்டின் புதிய நட்சத்திரமாக மாறியிருக்கும் நடராஜனிடம் மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை பகிரும் வகையில் அவருடன் தமிழில் பேசியிருந்தார். 

நடராஜன் கூறியிருந்தது, ‘’ஒரு நெட் பவுலராக அணிக்கு வந்த இத்தனை பெரிய வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் நல்ல ஃபார்மில் இருந்ததாகவும் அதனால் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாட முடிந்தது. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டுமென மட்டுமே முடிவு செய்தேன். அதற்கு உடன் இருந்தவர்களும் உதவினார்கள். என்னுடைய பலமே யார்க்கர் தான் அந்த பலத்தை நம்பித்தான் விளையாட வேண்டுமென இறங்கினேன். அதே நேரத்தில் விக்கெட்டுக்கு ஏற்ற வகையில் கேப்டனிடம் எப்படி விளையாட வேண்டுமென கேட்டுக்கொண்டு அதற்கேற்ற வகையில் பந்து வீசினேன்’ என்றார்.


போட்டில் டென்சனான தருணங்களில் கூட உங்களுடயை முகம் எப்படி ஒரேமாறியாக அமைதியாக இருந்தது என்ற கேள்விக்கு, நான் எப்போதும் இப்படி தான் . நான் சாந்தமானவன். எதற்குமே ஆவேசம் அடைய மாட்டேன்'  எனவும் கூறியுள்ளார்.


நடராஜன் பற்றி  இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தது, ‘’ பும்ரா மற்றும் சமி விளையாட முடியாத சூழலில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார் . இதேபோல் அவர் தொடர்ந்து ஆட்டினால், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பாக இருக்கும்” என்றியிருக்கிறார்.


கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசிய தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் 'யார்க்கர்' நடராஜனுக்கு அவரின் நேற்றை பேட்டிக்கு பின்  பாராட்டுகளும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.