‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்ட இயக்குனர் மிஷ்கின் - லோகேஷ் ஒரு பெரும் வீரன், விஜய் பண்பானவர் .. புகழாரம் சூட்டிய பதிவு இதோ..

லியோ படப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு அறிக்கை வெளியிட்ட இயக்குனர் மிஷ்கின் Director Mysskin shared  Leo shooting Spot experience | Galatta

சென்னையில் எளிமையான முறையில் படப் பூஜை தொடங்கி படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு தனி விமானம் ஏற்பாடு செய்து காஷ்மீர் பறந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'லியோ' படக்குழுவினர் தற்போது காஷ்மீர் பகுதிகளில் பல இடங்களில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திருப்புமுனை, இந்திய திரைத்துறையே எதிர்பார்க்கும் திரைப்படம் என்று நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் இணைந்துள்ள லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை குழைக்காமல் வெற்றிபெறும் என்று நம்பப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் அதிரடியாய் உருவாகி வரும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

விறுவிறுப்பாக காஷ்மீரில் படப்படிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் படத்தில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இயக்குனர் மிஷ்கின் சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய மிஷ்கின் ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்.. minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப்படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.” என்று தெரிவித்துள்ளார்.

#Leo #vijay #mysskin #lokeshkanagaraj @Dir_Lokesh pic.twitter.com/rcYXcoCRRK

— Mysskin (@DirectorMysskin) February 26, 2023

இதனையடுத்து தீயாய் பரவியது அந்த அறிக்கை. இதனையடுத்து விரைவில் லியோ திரைப்படத்தின் நிறைவடையும் என்றும் குறிப்பிட்ட தேதியான வரும் ஏப்ரல் 29 ம் தேதி வெளியாகும் என்றும் எட்ஹிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மிஷ்கின் அவர்களின் அறிக்கையை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  

“எனது படத்தின் அழகியல் திருடப்பட்டுள்ளது” மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றசாட்டு – பரபரப்பை ஏற்படுத்திய பதிவு இதோ..
சினிமா

“எனது படத்தின் அழகியல் திருடப்பட்டுள்ளது” மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றசாட்டு – பரபரப்பை ஏற்படுத்திய பதிவு இதோ..

வசூலை குவிக்கும் தனுஷின் ‘வாத்தி’.. உற்சாகத்தில் ரசிகர்கள் – முதல் வார Collection report.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

வசூலை குவிக்கும் தனுஷின் ‘வாத்தி’.. உற்சாகத்தில் ரசிகர்கள் – முதல் வார Collection report.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

கெளதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் ‘பத்து தல’ படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்..  – வைரலாகும் Mass Look இதோ..
சினிமா

கெளதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் ‘பத்து தல’ படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்.. – வைரலாகும் Mass Look இதோ..