“மகான் படத்தின் அந்த பாடல் உருவாக அஜித் தான் காரணம்” - சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

மகான் பட பாடல் உருவாக இதுதான் காரணம் என்று தகவல் பகிர்ந்த சந்தோஷ் நாராயாணன் - Santhosh Narayanan about Mahaan bgm making | Galatta

தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஆட்கொண்டு வரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் சந்தோஷ் நாராயணன் ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி அட்டகாசமான பல பாடல்களை கொடுத்து மிக முக்கியமான இசையமைப்பாளர்களின் மத்தியில் தன் திறமையினால் தனித்து நின்றவர் சந்தோஷ் நாராயணன். ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகிய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மட்டுமல்லாமல். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

இவர் இசைக்கும் குரலுக்கும் கோடிகணக்கான ரசிகர்களை கொண்டு வலம் வரும் சந்தோஷ் நாராயாணன் தற்போது மிக முக்கிய திரைப்படமான நானியின் ‘தசரா’ படத்திலும் மற்றும் அந்தகன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘AK62’ படத்திலும் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 அமேசான் பிரைமில் வெளியான ‘மகான் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அரியாசனம் பாடலின் பின்னணி இசையை பதிவிட்டு இந்த பாடலுக்கு பின்னணியில் உள்ள ஊக்கம் என்ன? என்று சந்தோஷ் நாராயணிடம் கேட்டுள்ளார்.  அதற்கு சந்தோஷ் நாராயணன் மங்காத்தா படத்தில் அஜித் குமார் அறிமுகமாகும் காட்சியை பதிவிட்டு, இந்த காட்சியை தொடர்ந்து ஓட விட்டு இதில் கிடைத்த உத்வேகத்தில் உருவானது தான் இந்த இசை என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதிவு மிகப்பெரிய அளவு இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Ha Ha no drugs . Literally had this scene playing in loop 🧨🧨 pic.twitter.com/bgI8dv7hbq

— Santhosh Narayanan (@Music_Santhosh) February 26, 2023

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அட்டகாசமான கதையுடன் வெளியான படம் ‘மகான் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருப்பார். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படத்தில் நேர்த்தியாக அட்டகாசமான பின்னணி இசையை சந்தோஷ் நாராயாணன் கொடுத்திருப்பார். இந்த படத்தை காட்டிலும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அப்போது வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

“Dress மாத்தும் போது பூரான் இருந்துச்சு” அயலி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்த படக்குழுவினர் – சுவாரஸ்மான பேட்டி இதோ..
சினிமா

“Dress மாத்தும் போது பூரான் இருந்துச்சு” அயலி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்த படக்குழுவினர் – சுவாரஸ்மான பேட்டி இதோ..

சிம்புவிற்கு விரைவில் திருமணம்? வெளியான பரபரப்பு  தகவல்.. - விளக்கமளித்த அறிக்கை இதோ..
சினிமா

சிம்புவிற்கு விரைவில் திருமணம்? வெளியான பரபரப்பு தகவல்.. - விளக்கமளித்த அறிக்கை இதோ..

“எனது படத்தின் அழகியல் திருடப்பட்டுள்ளது” மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு – பரபரப்பை ஏற்படுத்திய பதிவு இதோ..
சினிமா

“எனது படத்தின் அழகியல் திருடப்பட்டுள்ளது” மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு – பரபரப்பை ஏற்படுத்திய பதிவு இதோ..