பிரபல மாடல் ஆக இருந்து பல விளம்பர படங்களில் நடித்து பின் தெலுங்கில் லீடர் என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் ரிச்சா.தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென்ற ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.அடுத்ததாக 2011-ல் மயக்கம் என்ன,ஒஸ்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ரிச்சா.

இரண்டு படங்களே தமிழில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் ரிச்சா.தொடர்ந்து சில தெலுங்கு,பெங்காலி படங்களில் நடித்து வந்த ரிச்சா.2013-ல் நடிப்பதை விட்டு விட்டு தனது மேற்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றார் ரிச்சா.

அங்கு தன்னுடன் படித்த Joe Langella என்பவருடன் காதல் ஏற்பட அவரை கடந்த 2019 டிசம்பரில் கரம்பிடித்தார் ரிச்சா.இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

தான் கர்பமாக இருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் உலகிற்கு அறிவித்தார் ரிச்சா.கடந்த மே 27ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றும் Luca Shaan Langella என்று பெயரிட்டுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரிச்சா.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.