பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோ திகழும் தளபதி விஜயின் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன்.S தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாரிசு திரைப்படத்தின் பாடல்களின் கம்போசிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
thaman s shared photo of varisu movie song composing session