தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த பட்டம் போலே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதனையடுத்து கன்னடம், தமிழ், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த பேட்டை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கடைசியாக தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தற்போது பாலிவுட்டில் யாத்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே பிரபல இசைக்கலைஞர் பாட்ஷா உடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்த டௌபா எனும் மியூசிக் வீடியோ தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.  அந்த வகையில், மாளவிகாவின் கடைசி பிகினி புகைப்படத்தை கேட்டு ஒரு நபர் கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் தனது பிகினி உடையை மட்டும் புகைப்படமெடுத்து மாளவிகா மோகனன் பதிவேற்றம் செய்தார். மாளவிகாவின் இந்த பதில் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.  மாளவிகாவின் அந்த பதிலடி புகைப்படம் இதோ…
 

Ur last bikini pic @MalavikaM_ #AskMalavika#MalavikaMohanan
Plz share with ur fans pic.twitter.com/GsSjZrMim8

— MehRRRaj🔔 (@mdgouse13116) June 24, 2022