தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த போராளி படத்தின் மூலம் நாயகியாக களம் இறங்கியவர் நிவேதா தாமஸ். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் எனும் படத்தில் நடித்தார். தமிழ், மலையாளம் என கலக்கிக் கொண்டிருந்த நாயகி, தெலுங்கு திரையுலகில் நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்க தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிந்த நிலையில் தெலுங்கிலேயே தங்கி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பாபநாசம் என்ற சூப்பர்ஹிட் படத்திலும், AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திலும் மகளாக நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிவேதா தாமஸ் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சில நாட்கள் முன்பு ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தற்போது நிவேதா தாமஸ் பாடிய பாடல் வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது. ஜானே கைஸே பாந்தே தூணே பாடல் பாடி அசத்தியுள்ளார். வீடியோ பகிர்ந்த சில நொடிகளிலே பாடல் ஹிட்டானது. பன்முகத்திறன் கொண்ட நடிகை நிவேதா தாமஸை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

நிவேதா தாமஸ் நடிப்பில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகவுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான இந்த படத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார். வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இது தவிர்த்து நானி நடிக்கும் V மற்றும் சுவாஸா போன்ற படங்கள் உள்ளது. சுதீர் வர்மா இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் நிவேதா.