கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு,கல்யாண பரிசு,சாக்லேட்,தமிழ்செல்வி உள்ளிட்ட 4 தொடர்களை நடிகர்கள் ஷூட்டிங் வர முடியாதது,பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக தயாரிப்பு நிறுவனம் திடீரென்று நிறுத்தியது.இதனை தொடர்ந்து இந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.இதே போல மற்ற சேனல்களிலும் ஏதேனும் சீரியல் நிறுத்தப்படவுள்ளதா என்பது குறித்து பிரபல தினசரி பத்திரிகையான ஹிந்து தமிழ் நிறுவனத்திடம் ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் பேசியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளது,ஒளிப்பரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் எந்த மாற்றமுமின்றி ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் கைவசம் 25 எபிசோடுகள் வந்த பிறகே புதிய எபிசோடுகள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அதுவரை பழைய எபிசோடுகளின் ஒளிபரப்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.இது போல மேலும் ஒரு சூழ்நிலை வந்தால் அதனை சமாளிப்பதற்காக இந்த முடிவு என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.கடந்த 5 நாட்களாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் புதிய எபிசோடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.