யூடியூப்பின் பிரபல சேனல்களில் ஒன்றான Blacksheep சேனலில் வேலைபார்த்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கார்த்திக் வேணுகோபால்.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தினை இயக்கியிருந்தார்.

2019-ல் வெளியான இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார் கார்த்திக்.ரியோ ராஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.ஷிரின் காஞ்சவாலா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

விக்னேஷ்காந்த்,ராதாரவி,சுட்டி அரவிந்த்,மயில்சாமி,ராஜ் மோகன்,விவேக் பிரசன்னா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக கார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்