புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ரத்து செய்ய கோரி சாஸ்திரிபவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் சங்கத்தினர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர்.

neetதமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அனிதா மறைவுக்கு பின்னர் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யகோரி தன்னார்வலர்கள் முதல் பல்வேறு கட்சிகள் முதற்கொண்டு போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தார்கள்.

மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நீட் தேர்வின் எதிர்ப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்றும்  தேசிய கல்வி கொள்கை 2020 திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் கொடிகளை ஏந்தியும் பறை இசை அடித்து ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் நிறுபன்: உயிர்கொல்லி தேர்வான நீட்தேர்வை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் கையெழுதிடமால் தாமதம் காட்டுவது ஏன் என்றும் அவரிடம் பேனா இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும்  கோவை பாலியல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் சங்கத்தினர் தொடர்ச்சியாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் என்றும் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிருபன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.