பல கோடி சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக திகழும் நடிகை நயன்தாரா  நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த GOLD திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாகவுள்ளது.

மேலும் முதல்முறை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக தெலுங்கில் தயாராகும் காட்ஃபாதர் திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்து வருகிறார். 

தொடர்ந்து நயன்தாராவின் மாயா மற்றும் டாப்ஸியின் கேம் ஓவர் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹார்ர் த்ரில்லர் படமாக யயாராகும் கனெக்ட் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. த்ரில்லர் படமாக தயாராகியுள்ள O2 திரைப்படத்தில் ரித்து ராகஸ் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்த ரித்விக் நயன்தாராவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திலிருந்து நயன்தாராவின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…