தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நல்ல திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள். முன்னதாக கடந்த ஆண்டில்(2021) இவரது தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த ஜீவி2 திரைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனிடையே தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூடி, அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ராஜா கிளி. சாட்டை, அப்பா, வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களில் மக்களின் மனதை வென்ற சமுத்திரக்கனி - தம்பி ராமையா கூட்டணி ராஜா கிளி திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

தம்பி ராமையா அவர்களின் மகனும் பிரபல நடிகருமான உமாபதி ராமையா இத்திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜா கிளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

V House Production's next@umapathyramaiah Directorial #Rajakili First look will be out on 8th 6 pm@sureshkamatchi #ThambiRamaiah @thondankani @gopinath_dop @jiddukedar @vairabalan @Veerasamar @silvastunt@iamSandy_Off @iambababaskar @navadeviRK @editorsudharsan pic.twitter.com/A7vOCkxJjd

— V House Productions (@VHouseProd_Offl) November 6, 2022