'சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட்டான சாபம் கொடுத்த மிஷ்கின்!'-  மாவீரன் பட விழாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

மாவீரன் பட விழாவில் சிவகார்த்திகேயனுக்கு சாபம் கொடுத்த மிஷ்கின்,mysskin appreciated sivakarthikeyan in maaveeran movie promotion event | Galatta

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக வரவிருக்கும் மாவீரன் திரைப்படம் இந்த வாரம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் மாவீரன் படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திற்கான விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் அவர்கள் மேடையில் பேசும்போது, “நடிகராக நான் பழகவில்லை, ரொம்பவும் டிசிப்ளினோடு இருக்க வேண்டியதாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் எல்லாம் எப்படி இத்தனை வருஷம் டிசிப்ளினாக இருக்கிறார் என்று தெரியவில்லை இதற்கு சிவா உங்களுக்கு ஒரு பெரிய விருது வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் மிகவும் டிசிப்ளினான நடிகர்கள் என்று நான் சொல்கிறேன் அந்தப் பட்டியலில் தற்போது சிவாவும் இணைந்து இருக்கிறார்.” என மிஷ்கின் அவர்கள் சொன்னதும் நடிகர் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று தனது நன்றியை தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய மிஷ்கின் அவர்கள், “சிவகார்த்திகேயன் ஒரு ஸ்வீட் பாய். நான் கடைசி முறை சொன்னபோது கூட அதை தவறாக எடுத்துக் கொண்டார்கள். ரஜினி சார் மாதிரி சிவா என்று, நான் இதை உண்மையாக உணர்கிறேன்.. ஏனென்றால் எல்லோரிடமுமே ஒரு நல்ல பெயரை எடுத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு பையன். அதை நான் தள்ளி இருந்து பார்க்கும் போது சிவாவைப் பற்றி சொல்லும் போதெல்லாம் நான் நினைத்துக் கொண்டேன் இதெல்லாம் வெறும் கதையாக இருக்கும் போல என்று, ஆனால் அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப நிஜம்.. சிவா ரொம்ப உண்மையான ஒரு பையன். எல்லோரிடமும் ரொம்ப அன்பாக பழகக்கூடிய ஒரு பையன். அதற்குத்தான் நான் உதாரணம் சொல்லி இருப்பேன். இரவு முழுவதும் நாங்கள் சண்டைக் காட்சியை படமாக்கும் போது, ஒரு 15 பேரை அடிக்கின்ற காட்சியில், மொத்தம் 40 ஷாட்டுகள் எடுத்தார் டைரக்டர்... அந்த 40 ஷாட்டிலும் இரவு முழுவதும் அந்த 15 பேரிடமும் போய் “சாரி அண்ணா சாரி அண்ணா” என்று மன்னிப்பு கேட்டார். “நானும் ஒரு டேக்கில் ஆவது இவன் இதை விடுவானா கண்டுபிடித்து விடலாம் இவன் நடிக்கிறான் என்று” என நினைத்தேன். ஆனால் விடிய விடிய எல்லோரிடமும் அந்த தம்பி தன் சக உழைப்பாளியிடம் போய் அவர்களை அடித்த உண்மையான அடி தான், அதற்கு மன்னிப்பு கேட்டது எனக்கு மிகவும்... அந்த ஒரு விஷயத்திற்காக சிவா நீ 40 - 50 ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்காக உனக்கு நான் சாபம் கொடுக்கிறேன். இதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய கைத்தட்டல்களை நீங்கள் கொடுக்கலாம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்துடன் இணைந்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்துடன் இணைந்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான அறிவிப்பு இதோ!

‘உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கே!’- மாமன்னன் முக்கிய காட்சியின் கலகலப்பான ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்த வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

‘உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கே!’- மாமன்னன் முக்கிய காட்சியின் கலகலப்பான ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்த வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ