தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை ஆகியப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 ,கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களும் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரையுலகங்களிலும் கலக்கி வருகிறார்.  மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்க, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள மாமனிதன் படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ள மாமனிதன் படத்திற்கு சென்சாரில் "U" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.