“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபட்டு செய்வது வழக்கம்.

ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு, அன்னபூரணி என்ற பெண், பொது மக்களுக்கு அருள் வாககு கூறி வருவதாக, வித விதமான புதிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது, தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இதனால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்குள் பெண் சாமியார் அன்னபூரணியை பற்றிய செய்திகளும், வதந்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்ட தொடங்கின.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தள பக்கங்களில் பெண் சாமியார் அன்னபூரணி, பேசும் பொருளாகவே மாறி இருக்கிறார். இதனால், இவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.

இப்படியாக, கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் ஆகி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாகவும், ஆனால், அவர் தற்போது 4 வதாக ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், நேற்று காலை முதல் புதிதாக செய்திகள் உலா வந்தன.

அதன் தொடர்ச்சியாக, “தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து வரும் போலியான பெண் சாமியார் அன்னபூரணியை  கைது செய்ய கோரி” தமிழ்நாடு இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சற்று முன்பாக நேரில் சென்று புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் சென்று அளித்துள்ள புகாரில், “எனக்கும், எனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக” புகார் அளித்து உள்ளார்.

மேலும், “எனக்கு வாட்ஸ்ஆப் மூலமும், செல்போன்கள் மூலமும் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும்” பெண் சாமியார் அன்னபூரணி அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு, வெளியே செய்தியாளர்களை சந்தித்த பெண் சாமியார் அன்னபூரணி, “என்னை நான் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டதில்லை என்றும், என்னை வழிபடும் பக்தர்களே என்னை அப்படி அழைப்பதாகவும்” விளக்கம் அளித்தார்.

அதே போல், “நான் திடீரென்றெல்லாம் ஆன்மிகம் பேச வில்லை என்றும், கடந்த 6 ஆண்டுகளாகவே ஆன்மிக பயிற்சி அளித்து வருகிறேன்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “நான் கடவுளின் அவதாரம் என யாரிடமும் கூறவில்லை என்றும், ஆன்மீக தீட்சை மட்டுமே அளித்து வருகிறேன்” என்றும், மீண்டும் அவர் வலியுறுத்தினார். 

எனினும், “நேரம் வரும் போது என்னை அறிந்து கொள்வீர்கள்” என்றும், கூறினார்.

முக்கியமாக, “இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்று கூறிய அவர், “சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் வெல்லும்” என்றும், பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசமாக அன்னபூரணி நடையை கட்டினார்.

இதனிடையே, “யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும்” சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி புகார் அளித்துள்ள சம்பவம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.