மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஆராட்டு. இதனை அடுத்து முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் மோகன்லால் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் எனும் ஃபேண்டசி அட்வென்சர் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். 

அடுத்ததாக மீண்டும் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் உடன் இணைந்து ராம் திரைப்படத்தில் நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர்  மற்றும் அலோன் ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 12Th மேன்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  12TH மேன் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து உன்னி முகுந்தன், ஷிவடா, அனுஸ்ரீ, அனுசித்தாரா, லியோனா லிஷாய், பிரியங்கா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சதீஷ் குரூப் ஒளிப்பதிவில், அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக மோகன்லால் பிரித்திவிராஜ் நடித்த ப்ரோ டாடி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசான நிலையில், மோகன்லாலின் 12TH மேன் திரைப்படமும் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.