தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தி நடிகர் மாதவன் நடிப்பில் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த ரன் திரைப்படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி, சீயான் விக்ரம் நடித்த பீமா, கார்த்தி நடித்த பையா மற்றும் மாதவன் & ஆர்யா இணைந்து நடித்த வேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே தனது கம்பேக் திரைப்படமாக இயக்குனர் லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க தி வாரியர் படம் தயாராகி வருகிறது. முன்னணி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, காவல் துறை அதிகாரியாக, கதாநாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள தி வாரியர் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் ஆதி நடித்துள்ளார். 

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.  இந்நிலையில் தி வாரியர் படத்திற்காக சிலம்பரசன்.TR பாடிய புல்லட் பாடல் தற்போது வெளியானது அட்டகாசமான அந்தப் பாடல் இதோ…