தங்கை உறவுமுறை கொண்ட 10 ஆம் வகுப்பு சிறுமியை, அண்ணன் முறை கொண்ட இளைஞன், காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி ஆடுத்து உள்ள 32 வயதான இமான் ராஜ் என்ற இளைஞர், புதுச்சேரியில் தங்கி பெயிண்டர் வேலை செய்வதற்காக, புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்.

அந்த வீட்டில் தங்கியிருந்தபடியே இமான் ராஜ், தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

ஆனால், அந்த உறவினர் வீட்டில் தங்கை முறை உறவு கொண்ட சிறுமி ஒருவர் இருந்து உள்ளார். இந்த சிறுமி, அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படியான சூழலில் தான், தங்கை உறவுமுறை கொண்ட அந்த சிறுமியிடம் சபலப்பட்ட அண்ணன் உறவுமுறை கொண்ட அந்த இளைஞன், “அந்த சிறுமியை காதலிப்பதாக” ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். 

தொடக்கத்தில், இதனை ஏற்க மறுத்த அந்த சிறுமி, ஒரு கட்டத்தில் அந்த இளைஞனின் ஆசை ஆசையான வார்த்தையில் மயங்கி, அந்த சிறுமியும் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இப்படியான நாளில், அந்த சிறுமியை ஏமாற்றி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அந்த சிறுமியை அந்த இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில், இவர்களது காதல் விவகாரம், அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக அந்த உறவினர் இளைஞரான அந்த இளைஞனையும், தங்களது மகளையும் அழைத்து கண்டித்து உள்ளனர்.
 
ஆனால், இந்த தவறான உறவு முறையை கை விட மறுத்து, அந்த இளைஞன் அதே தவறை மீண்டும் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது குறிதது வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திய நிலையில் “இது உண்மை” என்பது தெரிய வந்தது. இதனையடுத்து,  இமான் ராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமான் ராஜூக்கு அதிக பட்சமாக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

அதன் தொடர்ச்சியாக, தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, இமான் ராஜ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.