விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே, சக பயணியை முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன், தாருமாறாக குத்திய சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன், சர்ச்சைகளுக்கு அப்போதும் பெயர் போனவர் என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு. அந்த வகையில் தான், தற்போதும் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே, சக பயணியை மைக் டைசன் தாக்கியதாக புதிய குற்றச்சாட்டும், அவர் மீது சுமத்தப்பட்டு உள்ளது.

அதாவது, 55 வயதான பிரபல குத்துச் சண்டை ஜாம்பவானாக வலம் வந்த மைக் டைசன், தனது வயது மூப்பு காரணமாக, அவர் தற்போது ஓய்வு பெற்றிருந்தாலும் எல்லா காலக்கட்டத்திலும் அவர் சிறந்த குத்துச் சண்டை வீரராக அறியப்படுபவராக திகழ்கிறார். 

என்றாலும், “போதை மருந்து, பாலியல் வன்கொடுமை” உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அவரின் நற்பெயருக்கும், புகழுக்கும் அவரே அவர் பெயரை ஏற்படுத்திக்கொண்டு, கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார். 

இப்படியான சூழலில் தான், பிரபல முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து, அந்நாட்டில் உள்ள புளோரிடாவிற்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, மைக் டைசனின் பின் இருக்கையில் வந்து அமர்ந்திருந்த நபர் ஒருவர், மைக் டைசனிடம் அடிக்கடி பேசி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. 

சக பயணியின் இந்த செய்கையால் கடும் ஆத்திரமடைந்த மைக் டைசன், கடும் எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்ட சக பயணியான அந்த நபரை, உயரே பறந்துகொண்டிருந்த அந்த விமானத்திலேயே சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

மைக் டைசனிடம் அடி வாங்கிய அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட, தலையில் ரத்தக் காயங்களும் ஏற்பட்டு உள்ளன. இதனையடுத்து, அந்த நபர் எதவும் பேசாமல் தனக்கா விமான இருக்கையில் அப்படியே சோகத்துடன் அமர்ந்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள், “மைக் டைசன் முன்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், மைக் டைசனை எரிச்சல்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக பேச முயன்றதாகவும், இதனால் கோபமடைந்த மைக் டைசன், அந்த பயணியை தாக்கி உள்ளார்” என்றும், அந்த விமானத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே, சக பயணியை முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன், தாருமாறாக குத்திய சம்பவமும், இதனால் அந்த பயணி ரத்த காயம் அடைந்த சம்பவமும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.