மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா ஷூட்டிங் நிறைவு !
By Aravind Selvam | Galatta | April 22, 2022 19:49 PM IST

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தாமதமானது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.
ஒரு பாடல் ஷூட்டிங்கை தவிர மற்ற ஷூட்டிங்குகள் நிறைவடைந்து விட்டது என்றும் அந்த பாடல் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்று படக்குழு தெரிவித்தனர்.இந்த படத்தின் டைட்டில் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.
Shoot Done & Dusted 🤘
— GMB Entertainment (@GMBents) April 22, 2022
All Set for the Box Office Recovery From MAY 12th 💥💥#SarkaruVaariPaata#SVPOnMay12
Super 🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @14ReelsPlus @GMBents @MythriOfficial @saregamasouth pic.twitter.com/xCBaEzdCrl
An exciting announcement on Sarkaru Vaari Paata - super happy news for fans!
21/04/2022 02:38 PM
NEW UPDATE on SARKARU VAARI PAATA -much-awaited news for all Mahesh Babu fans!
18/04/2022 06:01 PM
Mahesh Babu's Sarkaru Vaari Paata touches the finish line | Exciting update out
12/04/2022 07:09 PM