தமிழகத்தின் முன்னணி ரேடியோ ஜாக்கியாகவும் இன்றளவும் பல ரேடியோ ரசிகர்களின் ஃபேவரட் RJ-வாகவும் திகழ்வவர் மிர்ச்சி செந்தில் எனும் செந்தில்குமார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல படங்களில் நடித்துள்ள மிர்ச்சி செந்தில் சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி செந்தில் தொடர்ந்து எவனோ ஒருவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக விஜய் டிவியின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த மிர்ச்சி செந்தில் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடங்களில் கலக்கினார். முன்னதாக சரவணன் மீனாட்சி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீஜாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானமான செலிபிரிட்டி ஜோடியான மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் விரைவில் பெற்றவர்களாகவுள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படங்களை மிர்ச்சி சிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நமது கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 
 

 

View this post on Instagram

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)