தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ், பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் பலருக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவரானார். கடைசியாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் PAN INDIA திரைப்படமாக வெளிவந்த ராதேஷ்யாம் திரைப்படத்தை தொடர்ந்து வரிசையாக இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளன.

முன்னதாக கே ஜி எஃப் திரைப்படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாக தயாராகி வருகிறது. அடுத்ததாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

ப்ராஜக்ட் கே திரைப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிப்ருஷ். 

ராமராக பிரபாஸ் & சீதையாக கீர்த்தி சனோன் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கிறார். ஹனுமானாக தேவ்தத்தா நாகே நடிக்கிறார். T-Series Films & Retrophiles தயாரிப்பில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் சாச்செட்-பரம்பரா இசையமைத்துள்ள ஆதிப்ருஷ் படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த டீசர் இதோ…