அமரர் கல்கி அவர்களின் ஈடுஇணையற்ற படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களும் முயற்சி செய்து கைவிட்ட பொன்னியின் செல்வனை நிஜமாகி இருக்கிறார் மணிரத்னம்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயமோகன் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக அஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மேலும் மெருகேற்றியுள்ளன.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி தற்போது அனைத்து தரப்பு ஒரு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடிக்கும் மேல் வசூலை எட்டியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி எமோஷ்னலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அந்த அறிக்கையில், வந்தியத் தேவனாக இந்த அட்டகாசமான பயணம் குறித்த எனது அனுபவங்களையும் நன்றியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களுக்காக இப்படி ஒரு அற்புத படைப்பை வழங்கிய அமரர் கல்கி அவர்களுக்கு முதலில் தலை வணங்குகிறேன். மறக்க முடியாத இந்த மாஸ்டர்பீஸ் படத்தை உருவாக்கிய இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு கோடி நன்றிகள்.. என உடன் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி கடைசியாக ரசிகர்கள் நண்பர்கள் சினிமாவின் காதலர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் அந்த முழு அறிக்கை இதோ…
 

Thank you #PS1 pic.twitter.com/BKUKScXfnf

— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) October 2, 2022