மக்களின் மனம் கவர்ந்த நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில்(2022) இதுவரை கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் மற்றும் மலையாளத்தில் 19(1)(a) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார்.

அடுத்ததாக பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து ஹிந்தியில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் இயக்குனர் கிஷோர் P பெலெகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மௌன படமாக தயாராகிறது காந்தி டாக்ஸ்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் காந்தி டாக்ஸ் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், க்யூரியஸ் டிஜிட்டல் pvt.ltd மற்றும் மூவி மில் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கரண் ராவட் ஒளிப்பதிவில், ஆஷிஷ் மட்ரே படத்தொகுப்பு செய்கிறார்.

டார்க் காமெடி மௌன திரைப்படமாக தயாராகிவரும் காந்தி டாக்ஸ் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பு Glimpse வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பலரது கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ இதோ…