ஆகச் சிறந்த நடிகராக தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த சீயான் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தையும் அவரது அசாத்திய நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப்-ஐ மையப்படுத்திய பீரியட் திரைப்படமாக உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சீயான் விக்ரம் நடிக்கிறார்.

பொன்னியின் செல்வன் மற்றும் பா.ரஞ்சித் திரைப்படம் வரிசையில் மேலும் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கவுள்ள சீதா- INCARNATION படத்தை இயக்குனர் அலாகிக் தேசாய் இயக்குகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இயக்குனர் அலாகிக் தேசாய், நடிகர் சீயான் விக்ரம் அவர்களை நேரில் சந்தித்து இப்படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சீயான் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார். PAN INDIA திரைப்படமாக பிரம்மாண்ட படைப்பாக தயாராகும் இத்திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

View this post on Instagram

A post shared by Alaukik Desai (@alaukikdesaiofficial)