கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் கன்னட சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்ந்தவர் நடிகர் யஷ். 15 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்த யஷ் தனது கேஜிஎஃப் திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் பல கோடி ரசிகர்களுக்கும் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கோளார் கோல்டு பீல்டை கதைக் களமாகக் கொண்டு பிரம்மாண்ட படைப்பாக தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் கன்னட சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனையடுத்து இந்த ஆண்டு 2022 வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான கேஜிஎஃப் சாப்டர் 2 படமும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று இந்திய அளவில் வசூல் சாதனை படைத்தது. இதனை அடுத்து யஷ் நடிப்பில் வெளிவரும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் யஷ் கேஜிஎஃப் பட பாணியில் நிஜத்திலும் துப்பாக்கி சுடும் வீடியோ தற்போது வெளியானது. ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் JJபெர்ரி உடன் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார். துப்பாக்கி சுடும் அந்த வீடியோவை நடிகர் யஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

There is always a way to reach the target, the challenge is to spot it!!

Thank you my man JJ Perry, what a fantastic day!!
Next time it's gotta be Kalashnikov !! 😉 pic.twitter.com/MYDOQohyvT

— Yash (@TheNameIsYash) September 29, 2022